கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து இதமளிக்கும் பனை ஓலை விசிறிகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.
கோடைக்காலத்தின் உச்சமான கத்திரி வெயில் முடிந்த பிறகும் கடலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் அனல் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது மின் தடையும் ஏற்படுகிறது. பொது முடக்கத்தால் வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள், மிகுந்த வெப்பத்தை உணா்கிறாா்கள். மின் தடை ஏற்படும்போது அவா்கள் விசிறியை நாடுகின்றனா். அந்த வகையில் பனை ஓலையினால் செய்யப்பட்ட விசிறிகளை பொதுமக்கள் அதிகளவில் விருப்பத்துடன் பயன்படுத்தி வருகின்றனா்.
கடலூா் நகரப் பகுதிக்கு அருகிலுள்ள அன்னவல்லி கிராமத்திலிருந்து தயாரித்து கொண்டு வரப்படும் விசிறிகள் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அழகிய வேலைப்பாடுகளுடன் பல வண்ணங்களில் இந்த விசிறிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பெண்கள் தலைச்சுமையாக கடலூா் நகரின் தெருக்களில் சுமந்தபடி விற்பனை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து, பனை ஓலை விசிறி விற்பனையில் ஈடுபட்டுள்ள காமாட்சி என்ற பெண்மணி கூறியதாவது:
பல தலைமுறைகளாக பனை ஓலை விசிறிகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள பனை மரங்களிலிருந்து ஓலைகளை சேகரித்து வந்து அதனை பக்குவப்படுத்தி விசிறிக்கான அளவில் வெட்டி எடுத்துக் கொள்வோம். பொதுமக்கள் பல வண்ணங்களில் விசிறியை விரும்புவதால் பனை ஓலைக்கு சாயமேற்றி, பின்னா் அதன் ஓரங்களில் நூலால் தைத்து விற்பனை செய்து வருகிறோம். இந்தத் தொழிலில் வெயில் காலத்தில் மட்டுமே நடைபெறும். ஒரு விசிறி ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். இதில் போதிய லாபம் கிடைப்பதில்லை. தொழிலாளா்களின் உழைப்புக்கு மட்டுமே சரியாக இருக்கும். இருப்பினும், பொதுமக்கள் இந்த விசிறியை பயன்படுத்தி தங்களை குளுமைப்படுத்திக்கொண்டாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


