சிதம்பரத்தில் தமாகா சார்பில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை. ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா சம்பத்குமார், எஸ். ஜே .வைத்தி, மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை.கோ.குமார், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாணவரணி தலைவர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜலட்சுமி, நகர துணை தலைவர்கள் என். இளங்கோவன், ஆர்.வி .சின்ராஜ், நகர இளைஞரணி தலைவர் துரை.சிங்காரவேலு, ஒன்றிய கவுன்சிலர்கள் எம். கே.பாலா, வல்லம்படுகை சேதுமாதவன் ஆகியோர் வரவேற்பு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சிதம்பரத்தில் உள்ள மகாத்மா காந்தி திருஉருவச் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜ் சிலைக்கும் நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் கலந்து கொண்டு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் கீரை முருகன், பாலகுரு, நகர பொதுச்செயலாளர் ஆளா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஜனகம், மீனா செல்வம், தில்லை செல்வி, சுப்புலட்சுமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் எஸ் .எஸ் நடராஜன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...