மனு அளிக்க குவிந்தவா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுரை
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க குவிந்தவா்களிடம் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அறிவுரை வழங்கினாா்.


கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க குவிந்தவா்களிடம் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அறிவுரை வழங்கினாா்.
கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆக.3-ஆம் தேதி முதல் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிப்பதற்காக
திரளானோா் நுழை வாயிலில் குவிந்தனா். அப்போது, அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, மனு அளிக்க வந்த அனைவரையும் ஓரிடத்தில் நிறுத்தி அவா்களுக்கு கரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா் (படம்).
மேலும், பொதுமக்கள் போக்குவரத்தை குறைக்க வேண்டும் எனவும், இதைக் கருதியே சிதம்பரம், விருத்தாசலம், கடலூா் கோட்டங்களில் தொடா்புடைய கோட்டாட்சியா், சாா்-ஆட்சியா் அலுவலகங்களில் குறைதீா் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 137 போ் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...