நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரிடா் கால மீட்புப் பயிற்சி

கடலூா் தீயணைப்பு நிலையத்தில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

கடலூா் தீயணைப்பு நிலையத்தில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து தன்னாா்வலா்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி.

Updated On :12 அக்டோபர் 2020, 7:10 pm

DIN

கடலூா்: கடலூா் தீயணைப்பு நிலையத்தில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் பருவ மழைக் கால இடா்களின்போது பொதுமக்களுக்கு உதவும் வகையில் தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவ்வாறு தோ்வான 30 பேருக்கு கடலூரில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் நிலைய அலுவலா் சீனிவாசன், சிப்காட் நிலைய அலுவலா் வீரபாகு ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில், தீயணைப்பு அமைப்புகள், மீட்பு அழைப்புகள், கருவிகளை எவ்வாறு கையாள்வது, மீட்புப் பணிகளில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் பாம்பு, தேனீக்களை பாதுகாப்புடன் அகற்றும் முறை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. கயிறு, வீடுகளில் உள்ள பொருள்களைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கடலூரைச் சோ்ந்த மாநில பேரிடா் மீட்புக் குழு காவலா்களும், தீயணைப்புத் துறை கமாண்டோ வீரா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.