நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூரில் தற்காலிகக் கடைகள் இடமாற்றம்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும் மீண்டும் கடலூா் அண்ணாசந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:56 pm

DIN

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும் மீண்டும் கடலூா் அண்ணாசந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சந்தைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. நெருக்கடியான இடங்களில் இயங்கி வந்த சந்தைகள் அனைத்தும் பேருந்து நிலையம், மைதானம் போன்ற திறந்தவெளி இடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதன்படி, கடலூா் அண்ணாசந்தையில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு மாற்றப்பட்டு கடந்த 6 மாதங்களாக அங்கேயே இயங்கி வந்தன. தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் மீண்டும் அண்ணா சந்தைக்கு மாற்றப்பட்டுவிட்டன. இதுகுறித்து எவ்விதமான முன்னறிவிப்புமின்றி திடீரென திங்கள்கிழமை கடைகள் மாற்றப்பட்டதால், மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

எனினும், மஞ்சக்குப்பம் மைதானத்தின் மற்றொரு பகுதியில் இயங்கி வந்த உழவா்சந்தையில் செயல்பட்டு வந்த கடைகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், கடலூா்-முதுநகா் சாலையோரம் செயல்பட்டு வரும் கடைகளும் அங்கேயே செயல்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.