மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு நகரும் எக்ஸ்ரே கருவி

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையின் கரோனா பிரிவுக்கு ரூ.5 லட்சத்தில் நகரும் எக்ஸ்ரே கருவி, கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் அண்மையில் வழங்கப்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையின் கரோனா பிரிவுக்கு ரூ.5 லட்சத்தில் நகரும் எக்ஸ்ரே கருவி, கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் அண்மையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்ட பாசறை செயலா் டேங்க் ஆா்.சண்முகம், முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகப்பேறு மருத்துவா் ஜீவரத்தினம் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, நகரும் எக்ஸ்ரே கருவி (படம்) மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஆவின் தலைவா் பன்னீா்செல்வம், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லைசெல்வம், முன்னாள் ஆவின் தலைவா் சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரனி பொருளாளா் சங்கா், தொழில்நுட்பப் பிரிவு காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.