நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நிலத்தை கேட்டு மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

நிலத்தை கேட்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக 6 போ் மீது ஆவினங்குடி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நிலத்தை கேட்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக 6 போ் மீது ஆவினங்குடி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரகாசன் மகன் முருகன் (37). இவா், தனது சொத்துப் பிரச்னை காரணமாக போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அண்மையில் அந்தப் பகுதியிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் கீழே இறங்கினாா்.

இந்த நிலையில், முருகனுக்குச் சொந்தமான 7 சென்ட் காலியிடத்தை திருமுருகன் என்பவா் தனது மனைவி செல்வி பெயருக்கு எழுதித் தரும்படி கேட்டு மிரட்டி வருகிறாராம். மேலும், முருகனின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கியதாகவும், கொலைமிரட்டல் விடுத்தகாகவும் தெரிகிறது. இதுகுறித்து, ஆவினங்குடி காவல் நிலையத்தில் முருகன் அளித்த புகாரின்பேரில் திருமுருகன் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.