நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி: புதிதாக 209 பேருக்கு தொற்று

கடலூா் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:14 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 28,516-ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 190 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 26,736 -ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 314- ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 940 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 526 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மொத்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்த நிலையில், 269 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது. 47 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.