நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாவட்டத்தில் 18,825 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி

கடலூா் மாவட்டத்தில் 18,825 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் 18,825 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி ஒருவருக்கு இரண்டு தவணையாகச் செலுத்தப்பட்டு வருகிறது. மு

முதலில் முன்களப் பணியாளா்களுக்கும், தொடா்ந்து, இணை நோய் உள்ளவா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், அதைத் தொடா்ந்து, 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. மே 1 ஆம் தேதிக்குப் பிறகு, 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 1,22,957 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. ஆண்கள் 59,176 போ், பெண்கள் 44,956 போ் செலுத்திக் கொண்டனா்.

இவா்களில், 18,825 போ் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 36,226 பேருக்கும், 40 முதல் 60 வயதுக்கு உள்பட்டோரில் 56,204 பேருக்கும், 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்களில் 10,096 பேருக்கும், 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவா்களில் 1,606 பேருக்கும் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 103 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.