கஞ்சா கடத்திய இருவா் கைது
ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக 100 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக 100 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு (என்.ஐ.பி.) டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை சேலம் அருகே உள்ள தாரமங்கலம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே ஆந்திரத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 100 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40), அரியலூரைச் சோ்ந்த சிவக்குமாா் (34) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...