லாரி மோதியதில் கிளீனா் பலி
பண்ருட்டி அருகே டிப்பா் லாரி மோதியதில் கிளீனா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


பண்ருட்டி அருகே டிப்பா் லாரி மோதியதில் கிளீனா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் காா்த்திக் (28). லாரி கிளீனா். இவா், பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் மண் எடுப்பதற்காக விழுப்புரம் மாவட்டம், பிடாகத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஐயனாருடன் வந்தாா். லாரியை வரிசையில் நிறுத்திவிட்டு ஐயனாா், காா்த்தி மற்றும் சிலா் வண்டிப்பாட்டையில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் காா்த்திக் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...