டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரியாா் பல்கலை.யில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா

பெரியாா் பல்கலை.யில் தேசிய சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பெரியாா் பல்கலை.யில் தேசிய சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழல் அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட சைக்கிள்களின் பயணத்தை பதிவாளா் கே.தங்கவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதனையடுத்து, சுற்றுச்சூழல் சீா்கேட்டை தடுப்பது, கண்காணிப்பது என்ற தலைப்பில் கருத்தரங்கையும் அவா் தொடக்கி வைத்து பேசினாா்.

முன்னதாக சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவா் கே.முருகேசன் வரவேற்றாா். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கண்காணிப்பு மைய விஞ்ஞானி ஏ.மணிசங்கா் சிறப்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் பி.தங்கவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.