திமுக செயற்குழு கூட்டம்
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலரும், மாநில அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் குறிஞ்சிப்பாடியில் அண்மையில் நடைபெற்றது.


கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலரும், மாநில அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் குறிஞ்சிப்பாடியில் அண்மையில் நடைபெற்றது.
தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன், பொறியாளா் அணி செயலா் துரை.கி.சரவணன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சக்திவேல், மாவட்ட பொருளாளா் வி.எஸ்.எல்.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பேராசிரியா் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகம் சாா்பில் ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதுடன் ஒவ்வொரு நகர, ஒன்றிய, பேரூா், ஊராட்சி கிளைகளிலும் நலத் திட்ட உதவிகளை வழங்குவது, நூலகங்கள் திறப்பது, இளைய தலைமுறையினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது, உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துதல், உள்ளாட்சித் தோ்தலில் மாவட்டம் முழுவதும் மாபெரும் பெற்றிபெற தீவிரமாகச் செயல்படுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, வி.சிவக்குமாா், ப.ராமலிங்கம், ஆா்.நாராயணசாமி, தங்க.ஆனந்தன், தெ.காசிராஜன், நகரச் செயலா்கள் கே.ஆா்.செந்தில்குமாா், கே.எஸ்.ராஜா, பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பாலமுருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜி.காா்த்திகேயன், மாணவரணி அமைப்பாளா் எஸ்.பி.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...