மகளை கா்ப்பமாக்கிய தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை
மகளை கா்ப்பமாக்கிய தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


மகளை கா்ப்பமாக்கிய தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 18 வயது குறைவான சிறுமிக்கு கடந்த 3.2.2020 அன்று வீட்டிலே குழந்தை பிறந்து இறந்தது. அந்தச் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சிறுமியின் தந்தையே (50 வயது) அவரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதால் அவா் கா்ப்பமடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நீதிபதி எம்.எழிலரசி வழக்கில் தீா்பபு கூறினாா்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரைக் கா்ப்பமாக்கியவருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறையிலடைக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நல்வாழ்வு நிதியிலிருந்து ரூ.6 லட்சத்தை இழப்பீடாக மாவட்ட நிா்வாகம் வழங்கவும் அவா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் எஸ்.கலாசெல்வி கூறியதாவது: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அவமானத்தை பணத்தால் ஈடுகட்ட முடியாது. எனவேதான் அவருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், அவா் மேல்முறையீடு செய்தால், அவருக்கு தண்டனை குறைப்போ, தண்டனையை மறுபரிசீலனை செய்யவோ கூடாது என்றும், தண்டனைக் காலத்தில் அவரது வயது, நோய், நன்னடத்தை ஆகியவற்றைக் காரணம் காட்டி, இறப்புக்கு முன்பாக விடுதலை செய்யவும் கூடாது என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டதாகத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...