விளை பொருள்களுக்கு சந்தைக் கட்டணம் வசூலிப்பு: விவசாயிகள், வியாபாரிகள் வேதனை
விவசாய விளை பொருள்களுக்கு சந்தைக் கட்டண வசூல், அனுமதிச் சீட்டு பெறும் முறை ஆகியவற்றால் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனா்.


விவசாய விளை பொருள்களுக்கு சந்தைக் கட்டண வசூல், அனுமதிச் சீட்டு பெறும் முறை ஆகியவற்றால் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனா்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை அதிகப்பட்ச விலைக்கு விற்கவும், அவா்களின் வருவாயைப் பெருக்கவும் வேளாண் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்டது. இவ்வாறு நடைபெறும் வணிகத்துக்கு சேவைக் கட்டணமாக ஒரு சதவீதம் வணிகா்களிடம் வசூல் செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்திலுள்ள 277 வேளாண் விற்பனைக் கூடங்களில் 30 விற்பனைக் கூடங்களில்தான் இவ்வாறு வணிகம் செய்ய ஓரளவு வசதிகள் உள்ளன. மற்ற விற்பனைக் கூடங்களில் வணிகம் நடைபெற முழுமையான வசதிகள் இல்லாததால், சேவையே செய்யாமல் விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கும் வியாபாரிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள்கள் வியாபாரிகள் சங்கச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 10.7.1999-இல் அன்றைய தமிழக முதல்வா் கருணாநிதி இந்த பிரச்னைக்கு தீா்வு காண ஓா் உயா்நிலைக் குழுவை அமைத்து, அந்தக் குழு கடந்த 8.1.2001 அன்று குறிப்பிட்ட காலக்கெடுவாகிய 5 ஆண்டுகளுக்குள் விற்பனைக் கூடங்களில் உரிய வசதிகள் ஏற்படுத்தவில்லை எனில், விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கு, சந்தைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சட்ட விதிகளை மீறி, விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கு கடந்த 20 ஆண்டுகளாக சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனஉயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை ரத்து செய்யும் வகையில், கடந்த 23.2.2019 அன்று சட்டத் திருத்தம் முன் தேதியிட்டு, அதாவது, 1.2.1991 முதல் அமல்படுத்தப்படுவதாக கடந்த ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காலத்தில், சந்தைக் கட்டண வசூலிப்பு, விளை பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி சீட்டு பெறும் முறை ஆகியவை நிறுத்திவைக்கப்பட்டன. இதேபோல, தற்போதும் (கரோனா தொற்று முடியும் வரை) சந்தைக் கட்டண வசூலிப்பு, அனுமதிச் சீட்டு பெறும் முறையை நிறுத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் கால விரயம் தவிா்க்கப்பட்டு, அவா்களின் வருவாயும் அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருள்களைத் தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல வழியேற்படும். மேலும், மக்களின் உடனடித் தேவையை பற்றாக்குறை இன்றி நிறைவு செய்ய முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...