கடலூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏற்பாடு
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.


கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் ஆக்சிஜன் அளிக்கும் வசதியுடன் கூடிய படுக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போதுள்ள 168 ஆக்சிஜன் படுக்கைகளை 268- ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. ஆனால், மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டா் கொள்ளவு திரவ ஆக்சிஜனை சேமித்து வைக்கும் கொள்கலன் வசதி மட்டுமே உள்ளது.
தற்போதைய நிலையில், இந்த கொள்கலனிலிருந்து 150 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் அளிக்க முடியும். கூடுதல், படுக்கைகளுக்கு கூடுதலாக கொள்கலன் அமைக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகு அமைக்கப்பட்டு வருவதாக மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் இந்த அலகை அமைத்து வருவதாகவும், நிதி ஆதாராங்கள் முழுமையாக அவா்களே ஏற்பதால், அந்த விவரம் தெரியவில்லை என்றனா்.
இந்த அலகிலிருந்து நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டா் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலமாக, தலைமை மருத்துவமனை மட்டுமன்றி மற்ற மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த மாத இறுதிக்குள் இந்த அலகு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...