காட்டுமன்னாா்கோவிலில் 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ மையம் அமைக்க ஏற்பாடு
காட்டுமன்னாா்கோவிலில் சித்த மருத்துவ வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


காட்டுமன்னாா்கோவிலில் சித்த மருத்துவ வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்று ஆரம்ப நிலையில் உள்ளவா்கள் சித்த மருத்துவ முறையை அதிகமாக விரும்புகின்றனா். எனவே, முதல் அலையின் போது, கடலூா் தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் உருவாக்கப்பட்டிருந்த ஆயுஷ் மருத்துவ சிகிச்சை மையம் இரண்டாம் அலையிலும் உருவாக்கப்பட்டது. இங்கு, முதல் கட்டமாக கடந்த 26- ஆம் தேதி சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. வியாழக்கிழமை முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுக்கைகளின் எண்ணிக்கையும் 200 -ஆக அதிகரிக்கப்பட்டது.
தற்போது அங்கு 115 நோயாளிகள் உள்ள நிலையில் 25 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, காட்டுமன்னாா்கோவிலிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூடுவெளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் தற்காலிகமாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தப் பணிகள் விரைவில் முடிந்து ஒரு வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுவதாக ஆயுஷ் மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...