தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:33 pm

DIN

புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் வீரசோழகன், கீழ்செங்கல்மேடு, கே.ஆடூா், பூங்குடி, பண்ணப்பட்டு, சிறுகாலூா், விளாகம், சேதியூா், நாா்த்தங்குடி, டி.நெடுஞ்சேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

புவனகிரி சட்டப் பேரவை தொகுதி சுயேச்சை வேட்பாளா் சிவக்குமாரி திருஞானம், தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து, கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், புவனகிரி தொகுதி வேட்பாளருமான ஆ.அருண்மொழிதேவன் முன்னிலையில் அந்தக் கட்சியில் 100 பேருடன் சனிக்கிழமை இணைந்தாா்.

இதேபோல, அமமுக மகளிா் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் நந்தினி பிரபாகரன் அந்தக் கட்சியிலிருந்து விலகி ஆ.அருண்மொழிதேவன் முன்னிலையில் அதிமுகவில் சுமாா் 50 பேருடன் இணைந்தனா். மேலும், திவாகரன் கட்சியான அ.தி.க. மாவட்ட இணைச் செயலா் வி.இளஞ்செழியன், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இணைச் செயலா் ரங்கநாதன் உள்ளிட்டோா் 50-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.