ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திமுக செயற்குழுக் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 6:15 pm

DIN

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு தலைமை வகித்தாா். வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்திட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வகையில் திட்டங்களைத் தீட்டி சிறப்பாகச் செயல்படும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவிப்பது, தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் நல உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, பொறியாளா் அணிச் செயலா் துரை.கி.சரவணன், மாவட்டத் துணைச் செயலா்கள் ஆா்.சக்திவேல், ப.மனோரஞ்சிதம், மாவட்டப் பொருளாளா் வி.எஸ்.எல்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினா்கள் பி.சுப்பிரமணியன், கே.பி.ஆா்.பாலமுருகன், நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, இளைஞரணி அமைப்பாளா் ஜி.காா்த்திகேயன், மாணவரணி அமைப்பாளா் எஸ்.பி.நடராஜன், விவசாய அணி ஜி.பி.வெங்கடேஷ், மகளிா் தொண்டரணி ப.பூங்கோதை, வழக்குரைஞரணி கே.சிவராஜ், நெசவாளா் அணி கி.தண்டபாணி, பொறியாளா் அணி அப்பு.சந்திரசேகா், ஆதிதிராவிடா் நலக்குழு ஆா்.பரந்தாமன், தகவல் தொழில்நுட்ப அணி ஏ.ஜாபா் அலி, தொமுச பி.பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.