வீராணம் ஏரியில் 4.40 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் உள்நாட்டு மீனவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 4 லட்சத்து 40 ஆயிரம் மீன்குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன.
வீராணம் ஏரியில் மீன்குஞ்சுகள் விடப்பட்டபோது.
வீராணம் ஏரியில் மீன்குஞ்சுகள் விடப்பட்டபோது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் உள்நாட்டு மீனவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 4 லட்சத்து 40 ஆயிரம் மீன்குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும்.  ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் இந்த பகுதியில் உள்ள சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது .மேலும் இந்த பகுதியில் உள்ள 6 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு இந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரியின் கரையோரத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக ஆண்டுதோறும் லால்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை சார்பில்    மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, அதனை இலவசமாக ஏரியில் விடுவர். இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டு மீனவர்கள் குறைந்த அளவு கட்டணத்தை அரசுக்கு செலுத்திவிட்டு மீன் பிடித்துக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வர்.

இதேபோன்று இந்த ஆண்டு மீன்வளத்துறை சார்பில் சனிக்கிழமை காலை இந்திய பெருரக கெண்டையின ரோகு  4 லட்சத்து 40 ஆயிரம் மீன்குஞ்சுகள்  ஏரியில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சிந்தனை செல்வன் பங்கேற்று ஏரியில் மீன்குஞ்சுகளை விட்டார். நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ், கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் எம்.வேல்முருகன், பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை உதவி இயக்குனர் எம்.குமரேசன், லால்பேட்டை மீன் துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி, மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் உடையார்குடி பி.ராமதாஸ். ஓமாம்புலியூர் எம். கலியபெருமாள், புடையூர். சுந்தரேசன், சேத்தியாதோப்பு ஆர். ஜபருல்லாஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com