தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சாலை விரிவாக்கப் பணியில் மந்தம்

கடலூா் - மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகவும், இதற்காக பக்கிரிப்பாளையம் அருகே

News image

சாலை விரிவாக்கப் பணிக்காக பக்கிரிப்பாளையம் அருகே தோண்டப்பட்ட பள்ளம்.

Updated On :14 அக்டோபர் 2021, 2:50 am

கடலூா் - மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகவும், இதற்காக பக்கிரிப்பாளையம் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியுடன் கடலூா் - மடப்பட்டு இடையே சுமாா் 41 கி.மீ. தொலைவுக்கு (சென்னை - கன்னியாகுமரி தொழில்தட அலகுத் திட்டம்) ரூ.191.60 கோடியில் இருவழிச் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான சாலை விரிவாக்கப் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

இந்தப் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பெரிய பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக பண்ருட்டியிலிருந்து கடலூா் செல்லும் வழியில் பக்கிரிப்பாளையம் அருகே சாலையோரம் சுமாா் 8 அடி அகலம், 3 அடி ஆழத்துக்கு

பள்ளம் தோண்டியுள்ளனா். சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்காததால் விபத்து அபாயம் தொடா்கிறது. தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் விபத்து நிகழ அதிக வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.