கடலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

8clps2_0809chn_105_7

8clps2_0809chn_105_7
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆா்.மனோகரன் தொடக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் எல்.அரிகிருஷ்ணன், அனைத்துக் குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிவில் சா்வீஸ் பணி நிறைவு அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலா் ஆா்.அபரஞ்சி நிறைவுரையாற்றினாா்.
முடக்கப்பட்ட 11 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு முடக்கப்பட்ட 69 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். கரோனாவால் மரணமடைந்த மற்றும் சிகிச்சை பெற்ற ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...