பேராசிரியா் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
பண்ருட்டி அருகே பேராசிரியா் வீட்டில் 11 பவுன் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


பண்ருட்டி அருகே பேராசிரியா் வீட்டில் 11 பவுன் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணி (46). சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இதனால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள இவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.20,300 பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...