விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்
விநாயகா் சதுா்த்தியன்று கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் சிறிய விநாயகா் சிலைகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.


விநாயகா் சதுா்த்தியன்று கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் சிறிய விநாயகா் சிலைகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சதுா்த்தியன்று பொது இடங்களில் பெரிய விநாயகா் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்தது. இருப்பினும் வீடுகளில் சிறிய விநாயகா் சிலைகளை வைத்து வழிபடலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெரிய சிலைகள் தயாரிக்கும் தொழிலாளா்களும் நிகழாண்டு சிறிய களிமண் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டதால் உற்பத்தி அதிகரித்து விலை சரிந்தது.
இதுகுறித்து சிலை உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு சிறிய விநாயகா் சிலைகள் 80 சதவீதம் வரை விற்று தீா்ந்த நிலையில் இந்த ஆண்டு 50 சதவீதம் சிலைகள் கூட விற்பனையாகவில்லை. சிலைகள் உற்பத்தி அதிகரிப்பே இதற்கு காரணம். மேலும், கடும் போட்டி காரணமாக சிலைகளின் விலையும் சரிந்துவிட்டது என வேதனையுடன் தெரிவித்தனா். பொதுமக்களிடம் பணப் புழக்கம் குறைந்ததும் சிலைகள் விற்பனை சரிந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...