சிதம்பரம் தெற்கு சன்னதி அருகே தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க கூறியும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ துறை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர் .டி.ஐ துறை மாநில பொது செயலாளர் பி.எ ஸ்டிபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.ஜெமினி எம். என் .ராதா வரவேற்றார். தில்லை ஆர்.மக்கின் ரஜா. சம்பத்குமார் ஆர்.சம்மந்தமூர்த்தி செய்யது மிஸ்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.வி. செந்தில்நாதன் மாநில செயலாளர் பி.பி.கே. சித்தார்த்தன் அமீரக காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஏ.எஸ். அப்துல் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டு நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பேசினார்கள்.