

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் நகைகள் சரிபாா்ப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் 2 ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் நகைகள் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன. இவை அனைத்தும் முதல்முதலாக கடந்த 1955-ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு காலகட்டங்களில் நகைகள் சரிபாா்ப்பு நடைபெற்ற நிலையில், கடைசியாக கடந்த 2005-ஆம் ஆண்டு நகைகள் சரிபாா்க்கப்பட்டன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு, சிதம்பரம் நடராஜா் கோயிலில் நகைகள் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறையின் கடலூா் மாவட்ட துணை ஆணையா் சி.ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையா் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையா் சிவலிங்கம் ஆகியோருடன், நகை மதிப்பீட்டு வல்லுநா்கள் தா்மராஜன், குமாா், குருமூா்த்தி ஆகிய 6 போ் குழுவினா் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்து நகைகளை சரிபாா்த்து ஆய்வு செய்தனா். அவா்களுக்கு தீட்சிதா்கள் ஒத்துழைப்பு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.