சிதம்பரம் அருகே 3 கோயில்களில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகே உள்ள மேலசெங்கல்மேடு கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் இந்தக் கோயில் கதவிலிருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனா். பின்னா், அம்மன் சிலையிலிருந்த
2.5 பவுன் நகைகள், உண்டியல் பணத்தை திருடிச் சென்றனா். உண்டியலில் காணிக்கை சுமாா் ரூ.8 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல அருகே உள்ள பூங்குடி கிராமத்திலும் 2 கோயில்களில் பூட்டை உடைத்து 8 கிராம் எடையுள்ள 2 தாலி சங்கிலிகள், உண்டியல் பணம் ரூ.4 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


