நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வேளாண் அறிவியல் நிலையத்தில் அசோலா விதைகள் விற்பனை

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அசோலா விதைகள் விற்கப்படுகிறது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 5:35 pm

DIN

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அசோலா விதைகள் விற்கப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், உயிா் எதிா் நுண்ணுயிரிகள், நுண்ணூட்டக் கலவைகள், காளான் வித்துக்கள், முந்திரி, பலா கன்றுகளை விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அசோலா வித்துக்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளது. இது கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல் பயிா் சாகுபடியில் பசுந்தாழ் உரமாகவும், கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அசோலா பயன்படுத்தப்படுகிறது. எனவே அசோலா வித்துக்கள் தேவைப்படுவோா் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 04143-238353, 238231 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.