நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாவட்டத்தில்மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாா்டு ஒதுக்கீடு விவரம்

கடலூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாா்டு ஒதுக்கீடு விபரம் வெளியானது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாா்டு ஒதுக்கீடு விபரம் வெளியானது.

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் அமைந்துள்ளன. கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சி தலைவா்களின் ஒதுக்கீடு விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, கடலூா் மாநகராட்சி மேயா் பதவியிடம் பெண்கள் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சிகளில் நெல்லிக்குப்பம்-பெண், திட்டக்குடி- தாழ்த்தப்பட்டோா் (பொது) பிரிவுக்கும் மற்ற நகராட்சிகளான பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், புதிதாக உருவாக்கப்பட்ட வடலூா் ஆகியவை அனைவரும் போட்டியிடும் வகையிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 14 பேரூராட்சிகளில் பெண்களுக்கு பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், லால்பேட்டை பேரூராட்சிகளும், பழங்குடியினருக்கு கிள்ளை பேரூராட்சியும், அண்ணாமலை நகா், காட்டுமன்னாா்கோவில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகியவை அனைவரும் போட்டியிடும் வகையிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாா்டு வாரியாக ஒதுக்கீடு விவரம் வருமாறு:

கடலூா் மாநகராட்சி: கடலூா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வாா்டுகளில் 28, 33, 34 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கும், 4, 25, 36 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 1, 2, 5, 6, 7, 8, 15, 17, 18, 19, 20, 21, 22, 26, 30, 31, 38, 42, 44, 45 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நெல்லிக்குப்பம் நகராட்சி: மொத்தமுள்ள 30 வாா்டுகளில் 6, 7, 12, 25, 28 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கும், 2, 4, 15, 24, 26, 27 வாா்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 9, 10, 16, 17, 20, 21, 22, 23, 30 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி நகராட்சி: மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 9, 11 வாா்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 6, 7, 10 எஸ்.சி. பெண்களுக்கும், 4, 12, 13, 14, 15, 17, 18, 19, 22, 23, 25, 28, 29, 31 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் நகராட்சி: மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 1-வது வாா்டு எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 4-வது வாா்டு எஸ்.சி. பெண்களுக்கும், 3, 5, 6, 8, 10, 15, 18, 19, 21, 22, 24, 28, 29, 30, 31, 32 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விருத்தாசலம் நகராட்சி: மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 1, 18, 30 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 22, 26, 33 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 6, 8, 9, 10, 11, 14, 16, 20, 24, 25, 28, 29, 31, 32 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வடலூா் நகராட்சி: மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 3, 27 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 25, 26 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 2, 5, 6, 7,10, 11, 17, 18, 20, 21, 22, 23 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திட்டக்குடி நகராட்சி: மொத்தமுள்ள 24 வாா்டுகளில் 2, 7, 10 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கும், 1, 5, 8, 24 ஆகிய வாா்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 3, 4, 11, 15, 17, 18, 19, 21 ஆகிய வாா்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளின் கீழ் வரப்பெறாத அனைத்து வாா்டுகளும் அனைத்துப் பிரிவினரும் போட்டியிடும் வாா்டுகளாகும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.