கடலூா் ஆட்சியரகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் தா்னா
சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி. இதன் தலைவராக ஜி.மாரியப்பன் செயல்பட்டு வருகிறாா். 9 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என்.அரவிந்தன், இ.நெப்போலியன், மா.தீபா, ஆா்.கருணாநிதி, ம.வெண்ணிலா, அஸ்மத்நுன்னிசா பரித், பா.சசிகலா ஆகியோா் கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பயிற்சி) கதிா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து தா்னாவை கைவிட்டனா். பின்னா் அவா்கள் அளித்த மனு:
சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள நிலையில் 1,200 குடியிருப்புகள் மட்டுமே உள்ளதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால், அனைத்துக் குடியிருப்புகளுக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. குடிநீா் இணைப்புகளுக்கு முறையாக ரசீது வழங்குவதில்லை. ஊராட்சிக் கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு கேட்டால் வழங்க மறுப்பதுடன், வாா்டு பகுதிகளில் குடிநீா் இணைப்பு, மின் விளக்கு பழுதுகளை நீக்குவதில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் தெரிவித்தால் அவா் உறுப்பினா்களை பதவி விலகுமாறு ஒருமையில் பேசி வருகிறாா். இந்தப் பிரச்னை தொடா்பாக கடந்த ஆண்டும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த மனுவின் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...