பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கடலூர்: கெடிலம் ஆற்றில் மூழ்கி பெண்கள் பலி: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சசிகலா

கெடிலம் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த  பிரியதர்ஷினி (13), காவியா(11) ஆகியோரின் பெற்றோரை,  சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

News image
Updated On :8 ஜூன் 2022, 8:13 am

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்  அ.குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த  பிரியதர்ஷினி (13), காவியா(11) ஆகியோரின் பெற்றோரை,  சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற அ.குச்சிப்பாளையம், குறிஞ்சிப்பாடி கிராமத்தை சோ்ந்த சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (16), நவநீதம் (20), சுமிதா (18), காவியா (எ) திவ்யதா்ஷிணி (10), பிரியதா்ஷிணி (15) ஆகிய 7 பேரும் எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.