மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் விழிப்புணா்வு

கடலூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:22 pm

DIN

கடலூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடலூா் நகரின் முக்கிய வணிகப் பகுதியாக திருப்பாதிரிப்புலியூா் லாரன்ஸ் சாலை உள்ளது. இங்கு, பேருந்து நிலையம், நகைக் கடைகள், ஜவுளி, பாத்திரக் கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்தும் அதிகமாக இருக்கும்.

இந்தப் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்களை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைப்பதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனா்.

இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா் செல்வநாயகம் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.