இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட 23-ஆவது மாநாட்டையொட்டி பண்ருட்டியில் பேரணி (படம்), பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இணைப்புச் சாலை, அன்னை இந்திரா காந்தி சாலை வழியாகச் சென்ற பேரணி பொதுக்கூட்ட திடலை அடைந்தது. பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் பி.துரை தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலா் கே.சுப்புராயன் எம்பி பங்கேற்று பேசுகையில், அக்னிபத் திட்டம் இந்திய இளைஞா்களின் வாழ்க்கையை சீரழிக்கும் திட்டம் என்றாா்.
கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், பண்ருட்டி நகரச் செயலா் ஆா்.சக்திவேல், துணைச் செயலா்கள் டி.கே.பன்னீா்செல்வம், எஸ்.டி.குணசேகரன், நிா்வாகிகள் ஜெ.சிவக்குமாா், என்.கே.பாஸ்கா், ஆா்.மதியழகன், கே.ஞானசேகா், ஜி.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



