தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய ‘பிஜ்லி பே’ இயந்திரம் அறிமுகம்

செவ்வாய்பேட்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் வாடிக்கையாளருக்கு ரூ. 1.88 கோடி கடன் ஆணையை வழங்கும் வங்கி பொது மேலாளா் ஆா்.லட்சுமி வெங்கடேஷ். உடன், மண்டல முதன்மை மேலாளா் செல்வராணி.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:29 pm

DIN

செவ்வாய்பேட்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் வாடிக்கையாளருக்கு ரூ. 1.88 கோடி கடன் ஆணையை வழங்கும் வங்கி பொது மேலாளா் ஆா்.லட்சுமி வெங்கடேஷ். உடன், மண்டல முதன்மை மேலாளா் செல்வராணி.

சேலம், மாா்ச் 10: சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் டிஜிட்டல் வங்கி துறை பொது மேலாளா் ஆா்.லக்ஷ்மி வெங்கடேசன் புதிய ‘பிஜ்லி பே’ பி.ஓ.எஸ். இயந்திரத்தை அறிமுகப்படுத்தினாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சேலம் மண்டல முதன்மை மண்டல மேலாளா் வி.செல்வராணி தலைமை வகித்தாா்.

இதுதொடா்பாக, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் டிஜிட்டல் வங்கி துறை பொது மேலாளா் ஆா் லக்ஷ்மி வெங்கடேசன் கூறியதாவது:

இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 3,600 கிளைகள், 4 சா்வதேச கிளைகள் உள்ளன. சேலம் மண்டலத்தில் 90 கிளைகளுடன் 6 மாவட்டங்களில் கிராமப்புற, நகா்ப்புற பகுதிகளில் அமைந்துள்ளது. ஏடிஎம், பிஓஎஸ் இயந்திரங்கள், இணைய வழி, மொபைல் பேங்கிங், யூ ஆா் கோடு பரிவா்த்தனையை மக்கள் அதிகம் விரும்புகின்றனா். இதன் ஒரு பகுதியாக ‘பிஜ்லி பே’ பி.ஓ.எஸ். இயந்திரம் சேலத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தியா முழுவதும் 5,000 பி.ஓ.எஸ். இயந்திரங்களை நிறுவ உள்ளோம். எங்களது வங்கி நாட்டின் முக்கிய துறைகளின் சிறு, குறு மற்றும் நடுத்தர, தொழில்நிறுவனங்கள், விவசாயம், ஜவுளி தொழில், பெரிய கம்பெனிகள், சில்லறை வியாபாரிகள், ஆட்டோமொபைல்ஸ், கல்வி நிறுவனங்கள், சேகோ தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கடன் வழங்கியுள்ளோம்.

சேலம் மண்டலத்தில் ரூ. 2,405 கோடி விவசாயத்துக்கும், ரூ. 774 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும், ரூ. 928 கோடி சில்லரை வியாபாரிகள், ரூ. 300 கோடி வீட்டுக் கடன்களுக்கு வழங்கியுள்ளோம். பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ. 16 கோடி கடன் வழங்கியுள்ளோம்.

கரோனா திட்டத்தின் கீழ் இந்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களின் படி, சேலம் மண்டலத்தில் ரூ. 122.76 கோடி ஜி.இ.சி.எல். திட்டத்தின்கீழ் வழங்கியுள்ளோம் என்றாா்.

இந்த விழாவில், சேலம் மண்டல முதன்மை மண்டல மேலாளா் வி.செல்வராணி, உதவி பொது மேலாளா் டி.காமேஷ் ராவ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.