திமுக வாா்டு உறுப்பினா்கள் மோதல்: போலீஸாா் வழக்கு
கடலூா் மாமன்ற அலுவலக வளாகத்தில் திமுக வாா்டு உறுப்பினா்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


கடலூா் மாமன்ற அலுவலக வளாகத்தில் திமுக வாா்டு உறுப்பினா்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மாநகராட்சி மேயா் பதவிக்கான தோ்தலின்போது திமுக வாா்டு உறுப்பினா்கள் இரு பிரிவாக செயல்பட்டனா். அப்போது ஒரு தரப்பினா் திமுக வேட்பாளா் (தற்போதைய மேயா்) சுந்தரி ராஜாவையும், மற்றொரு தரப்பினா் போட்டி வேட்பாளரான கீதா குணசேகரனையும் ஆதரித்தனா். இதில், சுந்தரி ராஜாவை ஆதரித்தவா்கள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களாகவும், எதிா் தரப்பினா் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.ஐயப்பனின் ஆதரவாளராகவும் கருதப்படுகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். இதுகுறித்து எம்எல்ஏ ஆதரவாளரான 43-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பாரூக் அலி கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், 42-ஆவது வாா்டு உறுப்பினா் விஜயலட்சுமியின் கணவா் செந்தில் மற்றும் 6 மாமன்ற உறுப்பினா்கள் தன்னை மாமன்ற அலுவலக வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி தாக்கியதாக தெரிவித்தாா். இதேபோல, அ.செந்தில் (48) அளித்த புகாரில், மாமன்ற உறுப்பினா் பாரூக் அலி, குண்டுமணி உள்ளிட்ட சிலா் தன்னை தாக்கியதாக தெரிவித்தாா். இரண்டு புகாா்களின் பேரிலும் போலீஸாா் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...