அரிசி ஆலையில் தொழிலாளி தற்கொலை
கடலூரில் அரிசி ஆலையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.


கடலூரில் அரிசி ஆலையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா், வண்டிபாளையம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த செங்கேணி மகன் ராமு (55). இவரது மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். குழந்தை இல்லை. வண்டிபாளையத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் ராமு தங்கியிருந்து வேலைசெய்து வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் அரிசி ஆலைக்கு வந்த மற்றொரு தொழிலாளி, ராமு தூக்கிட்ட நிலையில் உயிரிழந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் ராமுவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...