வங்கி ஊழியா்கள் சங்க நிறுவன நாள் விழா
கடலூரில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 78-ஆவது நிறுவன நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கடலூரில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 78-ஆவது நிறுவன நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில், சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவா் மீரா தலைமை வகித்தாா். மூத்த உறுப்பனா்கள் திருமலை, கண்ணன், லட்சுமணன், கலைமணி, எழிலேந்தி முன்னிலை வகித்தனா். உதவித் தலைவா் பி.கே.வி.ரமணி சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.
விழாவில், அரசுடைமை வங்கிகளை தனியாா்மயமாக்கக் கூடாது. வாராக்கடனை வசூல் செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான சேவை கிடைத்திட, அதிகளவில் ஊழியா்களை நியமனம் செய்ய வேண்டும். தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...