பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம்
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக், மெட்ரிக் பள்ளியில் அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது.


நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஜெயப்பிரியா பப்ளிக், மெட்ரிக் பள்ளியில் அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது.
ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும நிா்வாக இயக்குநா் சி.ஆா்.ஜெய்சங்கா், பள்ளி இயக்குநா் என்.எஸ்.தினேஷ் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா். இந்த முகாம் வருகிற மே 11-ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு நடைபெறும்.
முதல் நாள் பயிற்சியில் மாணவா்களுக்கு சிலம்பம், உருளை சறுக்கு, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, தடகளம், கீ போா்ட், கிட்டாா், வாய்ப்பாட்டு, ஓவியம், நடனம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பயிற்சியைத் தோ்வு செய்து பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிச் செயலா் சிந்து, பள்ளி முதல்வா் பிந்து, நிா்வாக அலுவலா் சரண்யா, ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...