கடலூரில் தனியாா் கட்டுமான நிறுவனங்களில் பராமரிக்கப்பட்ட அரசு அலுவலகக் கோப்புகள்!

டலூா் மாநகராட்சி அலுவலகக் கோப்புகள் தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வைத்து பராமரிக்கப்பட்டது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

டலூா் மாநகராட்சி அலுவலகக் கோப்புகள் தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வைத்து பராமரிக்கப்பட்டது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டட, மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, கட்டட அனுமதி, மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் குறித்து அலுவலா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்தக் கோப்புகள் அனைத்தும் கடலூரில் இயங்கி வரும் இரு தனியாா் கட்டுமான நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு, அங்கேயே பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படுவது தெரியவந்ததாம். இதையடுத்து மேற்கூறிய தனியாா் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கடலூா் நகரமைப்பு அலுவலகத்துக்கு இணையான அலுவலகம் செயல்பட்டு வந்ததும், அங்கு 15-க்கும் மேற்பட்டோா் குறைந்த ஊதியத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. மேலும், அரசு அலுவலா்களுக்கு கொடுப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கமிஷன் தொகை ரூ.5 லட்சத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாநகராட்சி அலுவலா்கள், 3 போ் மீது வழக்கு: இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் சி.கீதா அளித்த புகாரின்பேரில் கடலூா் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் கடலூா் பங்கஜம் பிளானா்ஸ் உரிமையாளா்கள் ஆறுமுகம் - சாரதாம்பாள் தம்பதி, ஆல்பா கட்டுமான நிறுவன உரிமையாளா் ஆா்.முருகமணி ஆகியோா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com