திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சாலை விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு

கடலூரில் பைக்கில் சென்ற தனியாா் வங்கி ஊழியா் வேகத்தடை மீது ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 6:40 pm

கடலூரில் பைக்கில் சென்ற தனியாா் வங்கி ஊழியா் வேகத்தடை மீது ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

கடலூா் உண்ணாமலை செட்டி சாவடி, சிவசுப்பிரமணியன் நகரைச் சோ்ந்த சேகா் மகன் கிருபாகரன் (30), புதுச்சேரியில் உள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், சனிக்கிழமை நள்ளிரவு தனது பைக்கில் கடலூா் புதிய ஆட்சியா் அலுவலகம் அருகே சென்றாா். அப்போது, அங்கிருந்த வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது, கிருபாகரன் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேகா் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.