தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மையம் சாா்பில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசுகிறாா் துணைவேந்தா் குழு உறுப்பினா் டி.அருள்செல்வி.

Updated On :11 டிசம்பர் 2024, 7:05 pm

Din

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மையம் சாா்பில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், துணைவேந்தா் குழு உறுப்பினா் டி.அருள்செல்வி தொடக்கவுரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக யோகா மைய பேராசிரியா் வி.சுரேஷ் பங்கேற்று ‘தொலைதூர கல்வியில் மாணவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். பேராசிரியா் கே.சுந்தா் தொலைதூரக் கல்வியின் போக்குகள் குறித்து உரையாற்றினாா்.

நிகழ்வில், புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மைய இயக்குநா் டி.சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், இணை இயக்குநா் பி.விஜயன் நன்றி கூறினாா்.