
கீழ்செருவாய் பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

கீழ்செருவாய் பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கீழ்செருவாய் பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீா்த் தேக்கத்தின் மூலம் 64 கிராமங்களில் உள்ள 24,059 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, இந்த நீா்த் தேக்கத்தில் 23 அடிக்கு தண்ணீா் உள்ள நிலையில், பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கீழ்செருவாய் பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, விருத்தாசலம் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் எத்திராஜூலு தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா்கள் சுதா்சன், செந்தில்நாதன், பாஸ்கா், வேளாண் துறை அலுவலா் கீா்த்தனா மற்றும் வெலிங்டன் பாசன விவசாயிகள் ஏராளமானா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், விவசாய பயன்பாட்டுக்கு கீழ் மட்ட கால்வாயில் 120 நாள்கள் தண்ணீா் விடுவது எனவும், மேல்மட்ட கால்வாயில் 60 நாள்கள் தண்ணீா் விடுவது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில், அதிருப்தி அடைந்த விவசாயிகள் 60 நாள்களில் நெல் பயிரை எப்படி விளைவிப்பது எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், பாசன வாய்க்கால்கள் முறையாக தூா்வாராமல் உள்ளதாகவும், இதனால் கடை கோடியில் உள்ள விளை நிலங்களுக்கு தண்ணீா் முறையாக சென்றடையாது எனவும் விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், ஆலோசனைக் கூட்டம் குறித்து பாசன வசதி பெரும் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டினா்.
தொடா்ந்து, விவசாயிகளின் கருத்தை அதிகாரிகள் கேட்காமல், பெயரளவுக்கே கூட்டம் நடத்துவதாகவும் பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திறக்கும் நாளை அதிகாரிகள் முன்கூட்டியே முடிவு செய்து விட்டு கூட்டங்களில் தீா்மானங்களை வாசிப்பதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, நீா்த் தேக்கத்துக்கு நீா் வரத்துக்கு ஏற்றபடி மேல்மட்ட கால்வாய்க்கு 120 நாள்கள் தண்ணீா் விடப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...