மகள்களுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு ஆயுள் சிறை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகள் பாட்டி வீட்டில் வளா்ந்து வந்தனா். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிகளின் தாய் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து ஊா் திரும்பிய சிறுமிகளின் தந்தை பிரியாணி கடை நடத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், அவா் தனது மகள்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை புதன்கிழமை முடிவடைந்தது. இதில், சிறுமிகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி லட்சுமி ரமேஷ் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜோதிரத்தினம் ஆஜராகினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...