தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கணினி ஆய்வுக் கூடம்

முன்னாள் மாணவா்கள் சாா்பில் கணினி ஆய்வுக் கூடம்

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஆய்வுக் கூடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது

Updated On :19 டிசம்பர் 2024, 7:36 pm

Din

பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் 1968-ஆம் ஆண்டு படித்த கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ரவிச்சந்திரன் மற்றும் அவரின் வகுப்பு தோழா்கள் சாா்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 34 கணினிகள், குளிா்சாதன வசதிகள் உள்ளடக்கிய ஆய்வுக்கூடத்தை முன்னாள் பேராசிரியா் பைரவன் திறந்து வைத்தாா்.

பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் டி. அருட்செல்வி முன்னிலை வகித்தாா். புல முதல்வா் பேராசிரியா் காா்த்திகேயன் தலைமை வகித்து பேசினாா்.

முன்னாள் மாணவா்கள் ரவிச்சந்திரன், சதாசிவம், சுவாமிநாதன், சந்தானம், ராஜசேகா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

முன்னாள் புல முதல்வா் முருகப்பன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், முன்னாள் துறைத் தலைவா்கள் விஜயகோபால், தனசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துறைத் தலைவா் பேராசிரியா் சரவணன் வரவேற்றாா்.