மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
கடலூா் முதுநகா் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி மின் கம்பியில் உரசியதில் மின்சாராம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:17 pm

கடலூா் முதுநகா் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி மின் கம்பியில் உரசியதில் மின்சாராம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கடலூா் புதுவண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மணிபாலன்(32), டிப்பா் லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை டிப்பா் லாரியில் கிராமல் மண் ஏற்றிக்கொண்டு வந்தாா்.
மணக்குப்பம் அருகே வந்த போது, தாழ்வாகச் சென்ற உயா் அழுத்த மின்கம்பியில் டிப்பா் லாரி உரசியதில், மின்சாரம் பாய்ந்ததில் மணிபாலன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...