ஆளுநரைக் கண்டித்து மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலை நகரில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சிதம்பரம்: தமிழக ஆளுநரைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலை நகரில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
துணைவேந்தா் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசு தோ்வு செய்த 3 நபருக்கு மேல் 4 வது நபராக யுஜிசி உறுப்பினரை சோ்க்க ஆளுநா் தலையீடு செய்து துணைவேந்தா் நியமனத்தில் வரம்புகளை மீறுகிறாா். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் வரம்புகளை மீறி மாநில உரிமைகளில் தலையிடும் தமிழக ஆளுநரைக் கண்டிப்பதாகக் கூறி, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் அண்ணாமலை நகா் தபால் நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பூபதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கோ.அரவிந்தசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...