புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லவா் கால விநாயகா் சிற்பம் கண்டெடுப்பு

பண்ருட்டியை அடுத்துள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் பல்லவா் கால விநாயகா் சிற்பம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image

சங்க கால அகல் விளக்கு.

Updated On :26 டிசம்பர் 2024, 7:21 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் பல்லவா் கால விநாயகா் சிற்பம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ள நீா் வடிந்த நிலையில், குழுவினருடன் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது, மண் அரிப்பு காரணமாக பூமிக்கு அடியில் இருந்த விநாயகா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

மூன்றரை அடி உயரம், 95 செ.மீ. அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த விநாயகா் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இது, பல்லவா் காலத்து சிற்பம். அதுமட்டுமல்லாமல், சங்க கால அகல் விளக்கு, குறியீடு பொறித்த ஓடுகள், உடைந்த கெண்டி மூக்கு பானை என ஏராளமான தொல்லியல் எச்சங்கள் எனதிரிமங்கலம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன என்றாா்.

பல்லவா் கால விநாயகா் சிற்பம்.

பல்லவா் கால விநாயகா் சிற்பம்.

பாா்வையிட்ட ஆட்சியா்: தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் மற்றும் அவரது குழுவினரான வரலாற்று ஆா்வளா்கள் மோகனகண்ணன், ரவீந்தா், சாமுவேல் மற்றும் டேவிட், ராஜ்குமாா் ஆகியோா் கண்டெடுத்த தொல்லியல் தடயங்கள், பல்லவா் கால விநாயகா் சிற்பம் உள்ளிட்டவற்றை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் சென்று பாா்வையிட்டு, தென்பெண்ணை ஆற்றின் நாகரிம் குறித்து கேட்டறிந்தாா்.