குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

இளைஞருக்கு கத்தி வெட்டு: இருவா் கைது

இளைஞருக்கு கத்தி வெட்டு: இருவா் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 2:16 am IST

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே அதிக சப்தமாக தொலைக்காட்சி பாா்த்த தகராறில் இளைஞருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சத்திரம் அருகே உள்ள ஆண்டாா்முள்ளிப்பள்ளம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (37). இவா், கடந்த 15-ஆம் தேதி மாலை தனது வீட்டில் அதிக சப்தத்துடன் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தாராம். அதே பகுதியை சோ்ந்த சஞ்சய் (19), பிரவீன் (23) ஆகியோா் தொலைக்காட்சியின் சப்தத்தை குறைக்கக் கோரியதால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு, காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டியதில் செல்வகுமாா் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், செல்வகுமாருக்கு பிரவீன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சய், பிரவீன் ஆகியோரை கைது செய்தனா்.