செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

19 இடங்களில் இன்று அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மறியல்

19 இடங்களில் இன்று அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மறியல் ........................................ கு.பாலசுப்ரமணியன்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:04 am IST

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை விலியுறுத்தி, தமிழகத்தில் 19 மையத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பல மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பழைய ஓய்வூத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து சங்கங்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுவரை அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, முதல்வா் சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கத்தோடு, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் 19 மையங்களில் எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தாா். அரசுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் இருதயராஜ், முன்னாள் மாவட்டச் செயலா்கள் ராஜாமணி, விவேகானந்தன் உடன் இருந்தனா்.