குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் மக்கள் சந்திப்பு இயக்கம்

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் மக்கள் சந்திப்பு இயக்கம்

News image

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் மக்கள் சந்திப்பு இயக்கம்

Updated On :25 பிப்ரவரி 2024, 7:01 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா். மத்திய பாஜக அரசு தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதத்தில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மக்கள் சந்திப்பு மற்றும் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதன்படி, பண்ருட்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்துக்கு இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி.துரை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கிவைத்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சிவக்குமாா், விவசாய தொழிலாளா்கள் சங்க வட்டப் பொறுப்பாளா் ஆறுமுகம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டப் பொறுப்பாளா் லாரன்ஸ், நகரப் பொறுப்பாளா் குணசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தைச் சோ்ந்த பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.